sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஏ.ஆர்.ரஹ்மான் மீது பாஜவுக்கு கோபமில்லை; கனிமொழிக்கு என்னதான் பிரச்னை: கேட்கிறார் அண்ணாமலை

/

ஏ.ஆர்.ரஹ்மான் மீது பாஜவுக்கு கோபமில்லை; கனிமொழிக்கு என்னதான் பிரச்னை: கேட்கிறார் அண்ணாமலை

ஏ.ஆர்.ரஹ்மான் மீது பாஜவுக்கு கோபமில்லை; கனிமொழிக்கு என்னதான் பிரச்னை: கேட்கிறார் அண்ணாமலை

ஏ.ஆர்.ரஹ்மான் மீது பாஜவுக்கு கோபமில்லை; கனிமொழிக்கு என்னதான் பிரச்னை: கேட்கிறார் அண்ணாமலை

19


UPDATED : ஜன 22, 2026 02:41 PM

ADDED : ஜன 22, 2026 02:05 PM

Google News

UPDATED : ஜன 22, 2026 02:41 PM ADDED : ஜன 22, 2026 02:05 PM

19


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''பாஜவுக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் என்ன சம்பந்தம்? அவர் மீது பாஜவுக்கு எந்த கோபமும் இல்லை. அவர் கருத்து அவருடையது. எங்கள் கருத்து எங்களுடையது. இதில் திமுக எம்பி கனிமொழிக்கு என்ன தான் பிரச்னை,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.



சென்னையில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: தமிழக துணை முதல்வர் உதயநிதியை நீதிபதி எவ்வளவு கடுமையாக சாடி இருக்கிறார் என்பது தெரியும். உயர் நீதிமன்றத்தின் கண்டிப்பை தொடர்ந்து உதயநிதி துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். உதயநிதியின் பேச்சு இனப்படுக்கொலைக்கு ஆதரவானது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திமுகவுக்கு ஒத்து ஊதும் இயக்கமாக கம்யூனிஸ்ட் மாறிவிட்டது. கறிக்கோழி பிரச்னைக்கு திமுக அரசே காரணம். ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த பேட்டியை நான் பார்த்தேன்.

இசைமேதை

ரஹ்மானை பொறுத்தவரை ஒரு இசைமேதை. தமிழத்தின் அடையாளம். இந்தியாவில் ஒரு இசையமைப்பாளர் ஆஸ்கர் விருது வாங்கி இருக்கிறார் என்றால் ஏ.ஆர்.ரஹ்மான் ஒருவர் தான்.
எங்கு போனாலும் கூட மேடையில் தமிழ் மொழியில் தான் பேசுவார். எல்லா புகழும் இறைவனுக்கு என்று சொல்லி நம்மை தொடர்ந்து பெருமைப்படுத்தி கொண்டிருக்கும் மனிதர். அவர் பேசியதில் ஒரு வரியை எடுத்து, அதை ஏது ஏதோ பண்ணி தேவையில்லாமல் சிலர் பிரச்னை செய்கிறார்கள்.

அதில் எனக்கு உடன்பாடு இல்லை. காரணம் எல்லோருக்குமே அவர்கள் பேசுவதற்கான கருத்து வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் சுதந்திரமாக பேசலாம். பேசட்டும் ஒன்றும் தவறு கிடையாது. ஏஆர் ரஹ்மானை பொறுத்தவரை இன்றைக்கு ராமாயணம் படத்துக்கும் ஹான்ஸ் சிம்மர் உடன் இசை அமைக்கிறார்.

ஹான்ஸ் சிம்மர் ஒரு சாதாரண ஆள் இல்லை. உலகத்தின் முதன்மை இசையமைப்பாளர். ஏர்ஆர் ரஹ்மானை பொறுத்தவரை எல்லாவிதமான படத்திற்கும் இசை அமைக்கிறார். அவர் சொல்லி இருப்பது சினிமா துறையில் அதிகார மாற்றம் எப்படி இருக்கிறது, குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் மாறி இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

அது அவருடைய கருத்தாக தான் நான் பார்க்கிறேன். அவர் பாஜ பின்னணயில் இருக்கிறது என்று எங்குமே சொல்லவில்லை. அந்த முழு பேட்டியையும் நான் பார்த்தேன். நான் ஏஆர் ரஹ்மானின் ரசிகன். எப்படி இளையராஜாவை மதிக்கிறேனோ, அப்படி ஏஆர்.ரஹ்மானையும் மதிக்கிறேன். அவருடைய கருத்தாக தான் பார்க்கிறேன்.

ஒருத்தர் பேசும் கருத்துக்கு எல்லாம் எல்லோரும் எப்படி கோபப்பட்டு பேசலாம் என்றால் இந்த நாட்டினை நடத்த முடியாது. எதிர்க்கருத்துகளும் இருக்கட்டும். ஏஆர்.ரஹ்மான் பேசிய கருத்து சரி, தவறு என்று நான் சொல்லவில்லை. அந்த கருத்தை பேசுவதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது என்று தான் நான் சொல்கிறேன்.

அதேநேரத்தில், ஏஆர் ரஹ்மான் ஒரு விளக்கத்தை கொடுத்த பிறகு, இந்த பிரச்னை முடிந்ததாக பார்க்கிறேன். ஏஆர்.ரஹ்மானை பொறுத்தவரை அவர்களை புண்படுத்த வேண்டாம், கிரியேட்டிவ் பீல்டில் இருக்கிறார்கள். இன்னும் பெரிய இசைகளை எல்லாம் அவர்கள் வெளியிட வேண்டும்.

என்ன பிரச்னை?

மக்களை மகிழ்விக்க வேண்டும். தமிழகத்தின் அடையாளமாக தொடர்ந்து திகழ வேண்டும். கிரியேட்டிவ் பீல்டில் இருப்பவர்கள் எல்லோருக்கும் கருத்து சொல்வதற்கு உரிமை இருக்கிறது. அந்த கருத்து எனக்கு சில இடத்தில் உடன்பாடாக இல்லை என்றால் அவர்களை தீட்டி தீர்க்க எனக்கு உரிமை இல்லை. இதில் கனிமொழிக்கு என்னதான் பிரச்னை என்று தெரியவில்லை.

பாஜவுக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் என்ன சம்பந்தம்? அவர் மீது பாஜவுக்கு எந்த கோபமும் இல்லை. அவர் கருத்து அவருடையது. எங்கள் கருத்து எங்களுடையது. எங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் மீது மதிப்பும் மரியாதையும் இருக்கும் போது, சில அரசியல்வாதிகள் ஏன் பாஜ VS ஏஆர்ரஹ்மான் என்று மாற்ற பார்க்க வேண்டும். அது அவசியமே இல்லை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

கனிமொழி கூறியது என்ன?

இது குறித்து திமுக எம்பி கனிமொழி வெளியிட்டு இருந்த பதிவில் கூறியிருப்பதாவது: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்னுடைய ஆதரவை தெரிவிக்கிறேன். மதம், மொழி மற்றும் அடையாளத்திற்கு அப்பாற்பட்ட கலைகளைக் கொண்ட ஒரு இசைக்கலைஞரை வேண்டுமென்றே குறிவைத்து தாக்குவதும், இந்தியாவில் அதிகாரத்தில் இருப்பவர்களின் அதிர்ச்சியூட்டும் மவுனமும் மிகவும் கவலையளிக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இந்த நாட்டின் இசையை உலகிற்கு எடுத்துச் சென்ற ஒரு படைப்பாளி மற்றும் கலைஞர், அதே நேரத்தில் இந்தியாவின் கலாசாரம் மற்றும் இந்திய விழுமியங்களை கொண்டு சேர்த்த முன்னணி தூதரும் ஆவார். அவர் பாரபட்சம் மற்றும் வெறுப்புக்கு அல்ல, மரியாதை மற்றும் நன்றியுணர்வுக்கு தகுதியானவர். இத்தகைய சகிப்புத்தன்மையற்ற தன்மைக்கு ஒரு ஜனநாயக மற்றும் பன்முக சமூகத்தில் இடமில்லை. இவ்வாறு கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளார்.








      Dinamalar
      Follow us