sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வட மாநில தொழிலாளர்களுக்கு துன்புறுத்தல்; அண்ணாமலை கண்டனம்

/

வட மாநில தொழிலாளர்களுக்கு துன்புறுத்தல்; அண்ணாமலை கண்டனம்

வட மாநில தொழிலாளர்களுக்கு துன்புறுத்தல்; அண்ணாமலை கண்டனம்

வட மாநில தொழிலாளர்களுக்கு துன்புறுத்தல்; அண்ணாமலை கண்டனம்

22


UPDATED : பிப் 09, 2026 02:20 PM

ADDED : பிப் 09, 2026 02:17 PM

Google News

UPDATED : பிப் 09, 2026 02:20 PM ADDED : பிப் 09, 2026 02:17 PM

22


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஈரோடு மாவட்டம் கஞ்சிகோவில் பகுதியில் ஹோட்டலில் பணியாற்றிக் கொண்டிருந்த வடமாநில தொழிலாளரை போலீசார் தாக்கிய சம்பவத்திற்கு பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை; சட்டத்தை நிலைநிறுத்துவதற்கே போலீசாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஒருவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதை மட்டுமே வைத்து, அவர்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கவோ, அவர்களை துன்புறுத்தவோ, அவமதிக்கவோ அல்லது தாக்கவோ போலீசாருக்கு எந்த உரிமையும் இல்லை.

ஊழல் நிறைந்த திமுக ஆட்சியில் மாநிலம் முழுதும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உடல் ரீதியாகவும், மொழி ரீதியாகவும் அதிகளவில் துன்புறுத்தப்படுவதில் எந்த ஆச்சரியம் ஏதுமில்லை. தமிழகத்தின் பொருளாதாரத்திற்கு புலம்பெயர் தொழிலாளர்கள் ஈடுசெய்ய முடியாத பங்களிப்பை நாம் அங்கீகரிக்க வேண்டிய நேரம் இது.

மெட்ரோ ரயில் திட்டங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் முதல் குடியிருப்பு கட்டிடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் சிறு உற்பத்தி நிறுவனங்கள் வரையிலான நமது பொருளாதார நடவடிக்கைகளின் ஒவ்வொரு தூணும் அவர்களின் உழைப்பைச் சார்ந்தே உள்ளன. எனவே, அவர்களுக்கான கண்ணியத்தை கொடுக்க மறுப்பது என்பது நமது வளர்ச்சியை நாமே சீர்குலைப்பதாகும்.

இதுபோன்ற சம்பவங்கள், அரசியல் லாபத்திற்காக திமுகவினரால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக பல ஆண்டுகளாக விதைக்கப்பட்ட வெறுப்பின் தவிர்க்க முடியாத செயல்களின் வெளிப்பாடு தான், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us