தோல்வி பயத்தில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின்; நயினார் நாகேந்திரன் விமர்சனம்
தோல்வி பயத்தில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின்; நயினார் நாகேந்திரன் விமர்சனம்
ADDED : பிப் 01, 2026 10:18 PM

சென்னை: தேர்தல் என்பதால் எதையோ கவர்ச்சிகரமாக அறிவித்து ஆட்சியைப் பிடித்து மக்களை ஏமாற்றும் வழக்கம் திமுகவுடையது என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசின் பட்ஜெட்டை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின், 'எப்படியும் தோல்வி உறுதி என்பதால் தமிழ்நாட்டை மீண்டும் மத்திய பாஜ அரசு புறக்கணித்து விட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். அவரது இந்த விமர்சனத்திற்கு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கையில்; தோல்வி பயத்தில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின். மாநிலத்திற்கு பட்ஜெட் போடச் சொல்லி 5 வருட ஆட்சியை வழங்கிய மக்களுக்கு, நீங்கள் அல்வா கிண்டிக் கொடுத்த கரண்டி அடிப்பிடித்துக் கிடக்கிறது.
மத்திய அரசு போடும் பட்ஜெட் என்பது எல்லா மாநிலங்களையும் உள்ளடக்கியது. ஒவ்வொரு திட்டத்திலும் தமிழகமும் சேர்ந்தே பயன்பெறும். தேர்தல் என்பதால் எதையோ கவர்ச்சிகரமாக அறிவித்து ஆட்சியைப் பிடித்து மக்களை ஏமாற்றும் வழக்கம் உங்களுடையது. நிலையான வளர்ச்சியை விரும்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பாணி அதுவல்ல.
தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று பேச எந்த அருகதையும் இல்லாத இந்தத் திமுக ஆட்சி வீழ்ச்சியடையும் நாளை எதிர்நோக்கி மக்கள் காத்திருக்கிறார்கள்!, இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

