sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திமுக அரசை மக்கள் துரத்தியடிக்கும் நாள் தொலைவில் இல்லை; நயினார் நாகேந்திரன்

/

திமுக அரசை மக்கள் துரத்தியடிக்கும் நாள் தொலைவில் இல்லை; நயினார் நாகேந்திரன்

திமுக அரசை மக்கள் துரத்தியடிக்கும் நாள் தொலைவில் இல்லை; நயினார் நாகேந்திரன்

திமுக அரசை மக்கள் துரத்தியடிக்கும் நாள் தொலைவில் இல்லை; நயினார் நாகேந்திரன்


ADDED : மார் 07, 2026 12:38 PM

Google News

ADDED : மார் 07, 2026 12:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'எங்கும் போதைமயமான தமிழகத்தில் வீட்டிற்குள்ளே கூட பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலையிருப்பது கொடூரமானது,' என்று பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை; சென்னையில் நேற்று முன்தினம் இரவு, போதையில் இருந்த காவலர் ஒருவர் ராயப்பேட்டையில் ஒரு வீட்டிற்குள் புகுந்து அங்கு இருந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

எங்கும் போதைமயமான தமிழகத்தில் வீட்டிற்குள்ளே கூட பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலையிருப்பது கொடூரமானது! அதிலும் வேலியே பயிரை மேய்ந்த கதையாக, பெண்களைக் காப்பதற்காக சீருடையணிந்த காவலர்களே குடிபோதையில் பெண்களின் பாதுகாப்பைப் பறிக்கும் கொடூரர்களாக மாறி வருவது நெஞ்சை உலுக்குகிறது.

அடாவடித்தனம் செய்யும் திமுகவின் உடன்பிறப்புகள், கஞ்சா போதையில் திரியும் இளைஞர்கள், குடிபோதையில் தங்களையே மறந்த காவலர்கள் எனப் பெண்கள் பாதுகாப்பைக் காவு வாங்கும் கயவர்களைத் தனது நிர்வாகத் திறனின்மையால் வளர்த்துவிடும் போதை மாடல் திமுக அரசைத் துரத்தியடித்து, தமிழக மக்கள் தங்களைக் காத்துக்கொள்ளும் நாள் தொலைவிலில்லை!, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us