ஒற்றுமையாக இருந்தால் திமுக ஆட்சியை அகற்றலாம்; செங்கோட்டையனுக்கு நயினார் ஆதரவு
ஒற்றுமையாக இருந்தால் திமுக ஆட்சியை அகற்றலாம்; செங்கோட்டையனுக்கு நயினார் ஆதரவு
ADDED : செப் 05, 2025 11:24 AM

நெல்லை: 'அனைவரும் ஒற்றுமையாக இருந்தால், திமுக ஆட்சியை நிச்சயமாக அகற்றலாம்' என்று அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என வலியுறுத்திய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆதரவு தெரிவித்துள்ளர்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; நிர்மலா சீதாராமன் எப்படி வரி குறைப்பு செய்திருக்கிறாரோ, அதைப்போல, மக்களுக்கு நன்மை செய்ய ஒரு மாற்று அரசாங்கம் தேவை. அது எங்களுடைய தேசிய ஜனநாயகக் கூட்டணி இருக்கும்.
அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் நாம் பேசுவது சரியாக இருக்காது. அவர்கள் இதுவரையில் ஒன்றாக இருந்தார்கள், அவங்களுடைய கருத்தை பேசுகிறார்கள். அவர்களே பேசி முடிக்க வேண்டியது. என்னைப் பொறுத்தவரையில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால், திமுக ஆட்சியை நிச்சயமாக அகற்றலாம்.
நல்ல விஷயம். அனைவரையும் ஒன்றாக இணைக்க வேண்டும் என்பது நல்ல விஷயம் தானே.
அரசியலில் எதுவுமே நிரந்தரம் கிடையாது. இன்னும் தேர்தலுக்கு 7 மாதங்கள் இருக்கின்றன. கடைசி ஒரு மாதத்தில் கூட நிறைய மாற்றங்கள் வரும். ஆட்சி மாற்றம், காட்சி மாற்றம் வரும், என்றார்.