sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 கல்லத்தி மரத்தில் சந்தனக்கூடு கொடி அகற்ற கேட்டு பா.ஜ., போலீசில் மனு

/

 கல்லத்தி மரத்தில் சந்தனக்கூடு கொடி அகற்ற கேட்டு பா.ஜ., போலீசில் மனு

 கல்லத்தி மரத்தில் சந்தனக்கூடு கொடி அகற்ற கேட்டு பா.ஜ., போலீசில் மனு

 கல்லத்தி மரத்தில் சந்தனக்கூடு கொடி அகற்ற கேட்டு பா.ஜ., போலீசில் மனு

4


ADDED : ஜன 15, 2026 03:59 AM

Google News

ADDED : ஜன 15, 2026 03:59 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான, மலை உச்சியிலுள்ள தல விருட்சமான கல்லத்தி மரத்தில் கட்டப்பட்டுள்ள முஸ்லிம்களின் சந்தனக்கூடு கொடியை அகற்றக் கோரி, பா.ஜ., வழக்கறிஞர் பிரிவு போலீசில் மனு அளித்துள்ளது.

மாவட்ட அமைப்பாளர் தங்கத்துரை அளித்த மனுவில் கூறியதாவது:

சந்தனக்கூடு விழாவிற்காக, ஒருவாரத்திற்கு முன்பு திருப்பரங்குன்றம் மலைமீது அமைந்துள்ள, தலவிருட்சமான கல்லத்தி மரத்தில் முஸ்லிம்களின் கொடியை ஏற்றி உள்ளனர். நீதிபதி உத்தரவின்படி கல்லத்தி மரத்தில் கொடி ஏற்றியவர்கள் மீது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அந்த இடமானது கோயிலுக்கு மட்டுமே உரியது. ஆனால் கல்லத்தி மரத்தில் கட்டப்பட்ட சந்தனக்கூடு கொடியை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

அந்த கொடியை கட்டிய நபர்களையும் கைது செய்யவில்லை.

எனவே போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு மாவட்ட தலைவர் சிவலிங்கம், மண்டல் தலைவர் வேல்முருகன், மாவட்ட இணை அமைப்பாளர் இளையராஜா, நிர்வாகிகள் காசி ராஜன், பாண்டியராஜன் உடன் சென்றனர்.






      Dinamalar
      Follow us