ADDED : ஜன 20, 2025 06:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : தமிழக பா.ஜ., உட்கட்சி தேர்தலில், முதற்கட்டமாக, 33 மாவட்ட தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பட்டியல் வெளியாகி உள்ளது.
தமிழக பா.ஜ., வில் உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. மாவட்டத் தலைவர் தேர்தலில், கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், முதற்கட்டமாக 33 மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு, நேற்று பட்டியல் வெளியிடப்பட்டது.
காஞ்சிபுரம் கெஜகதீசன், செங்கல்பட்டு தெற்கு பிரவீன்குமார், செங்கல்பட்டு வடக்கு ரகுராமன், திருவள்ளூர் கிழக்கு சுந்தரம், தென்காசி ஆனந்தன் அய்யாசாமி, தேனி ராஜபாண்டியன், கோவை தெற்கு சந்திரசேகர், திருச்சி மாநகர் ஒண்டிமுத்து, கன்னியாகுமரி சுரேஷ் என, 33 பேர் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.