ADDED : ஆக 05, 2025 02:48 AM

நன்றாக இருந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை, முதலில் நடுரோட்டில் உட்கார வைத்தது, பின்னர் ஜெயலலிதாவின் சமாதியில் உட்கார வைத்தது, ஒழுங்காக இருந்த அ.தி.மு.க.,வை உடைக்க வைத்தது என, எல்லா வேலைகளையும் பின்னணியில் இருந்து செய்தது பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தான். இப்போது, அவரை நடுத் தெருவில் கொண்டு வந்து நிறுத்தி விட்டனர்.
பிரதமரை சந்திக்க, பன்னீர் செல்வம் ஆறு முறை போன் செய்தும், நாகேந்திரன் எடுக்கவில்லை. நாகேந்திரன் அரசியல் செய்துள்ளார்; இந்த நிலை, பன்னீருக்கு ஏற்பட்டிருக்கக்கூடாது. ஏற்கனவே, விஜயகாந்துடன் கூட்டணி வைத்து தே.மு.தி.க.,வை அழித்தனர். தற்போது, பா.ஜ., வலையில் சிக்கியிருப்பவர் பழனிசாமி. அவருக்கும் அதே கதி தான் ஏற்படும். அவருடன் கூட இருப்போர், விரைவில் பா.ஜ.,வில் இணைவர்.
- மாணிக்கம் தாகூர், காங்., - எம்.பி.,