ADDED : ஜூலை 17, 2026 11:19 PM

கீழடி: ''வைகை ஆற்றை பொதுமக்களுடன் இணைந்து பா.ஜ., சுத்தம் செய்யும்'' என அக்கட்சி சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் திறந்த வெளி அருங்காட்சியகம், தொல்பொருள் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட அவர் கூறியதாவது: 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன் நதிக்கரையில் மக்கள் நகர நாகரிகத்துடன் வாழ்ந்துள்ளனர். குடிநீர் உள்ளிட்டவற்றை பாதுகாப்பாக பயன்படுத்தியுள்ளனர். கழிவு நீர் செல்லவும் வடிகால் அமைத்துள்ளனர். மதுரை மாநகராட்சி கழிவு நீர் அனைத்தும் வைகை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் புழுக்கள் உள்ளன. கவர்னர் வைகை ஆற்றை சுத்தம் செய்ய வேண்டும் என கூறியதற்கு த.வெ.க., வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இன்று வரை வைகை ஆற்றை அமைச்சர்கள் யாராவது பார்வையிட்டுள்ளார்களா. மதுரையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரை முதல்வர் விஜய் கையில் அள்ளி பார்ப்பாரா. பா.ஜ.,வினர் பொதுமக்களுடன் இணைந்து வைகை ஆற்றை சுத்தம் செய்வோம் என்றார்.
