ADDED : டிச 22, 2024 02:00 AM
ஒரே நாடு; ஒரே தேர்தல் அம்சத்தை பார்லிமென்டிலும், நெஞ்சுக்கு நீதி நுாலிலும் ஏற்கனவே ஆதரித்தது தி.மு.க.,வும், கருணாநிதியும் தான்.
ஆனால், பச்சோந்தி போல எல்லா விஷயங்களிலும் மாறிக் கொள்ளும் தி.மு.க., இந்த விஷயத்திலும் திடுமென தன் நிறத்தை மாற்றி, ஒரே நாடு; ஒரே தேர்தல் நடைமுறையை அமல்படுத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கிறது.
பா.ஜ., மேலிடத்தில் இருந்து யாராவது கண்ணசைத்தால் போதும். ஒரே நாடு; ஒரே தேர்தல் சட்டத்துக்கு, பார்லிமென்டில் நாளையே ஆதரவளிப்பர். ஆனால், அ.தி.மு.க., அப்படி அல்ல. மக்கள் நலனுக்காக, நல்ல நோக்கத்துடன் சட்டம் கொண்டு வரப்படுகிறதா என்பதைப் பார்த்து, நன்கு யோசித்துதான் ஆதரிப்பதா, எதிர்ப்பதா என்பதை முடிவெடுப்போம்.
இந்த விஷயத்தில், நன்கு யோசித்து தீர்க்கமாக முடிவெடுப்போம் என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி கூறியுள்ளார்.
- செல்லுார் ராஜு,
முன்னாள் அமைச்சர்