உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 06, 2026 07:30 AM

அ நிறம் | அளவு
அயோத்தி ராமர் கோவில் தனியார் அறக்கட்டளையின் நிர்வாகத்தில் இருப்பதால், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்க முடியாது. மத்தியில் ஆளும் பா.ஜ., எல்லா மாநிலங்களிலும் உள்ள கோவில்களின் சொத்துக்களை, தனியார் அல்லது பக்தர்கள் வசம் மாற்றி வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான கோவில்களின் நிர்வாகத்தையும், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும், தனியாரிடம் கொடுக்குமாறு பா.ஜ., வற்புறுத்துகிறது.
எந்த குற்றமும் செய்யாத, பட்டியலினத்தை சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனை களங்கப்படுத்த, பா.ஜ., முயற்சிக்கிறது.
பட்டியலினத்தவர் உயர்கல்வி அமைச்சர் பதவி வகிப்பதா என்ற பொறாமையில், ஆர்.எஸ்.எஸ்., சதி செய்கிறது. டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பின், தமிழக கவர்னரின் போக்கு மாறி விட்டது.
- மாணிக்கம் தாகூர், தலைவர், தமிழக காங்கிரஸ்
