UPDATED : செப் 13, 2011 08:47 AM
ADDED : செப் 13, 2011 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : கேரள- தமிழக எல்லை பகுதியான வளர்ந்தாயமரம் பகுதியில் கேரள முதல்வருக்கு கறுப்புக்கொடி காட்டிய 31 பேர் கைது செய்யப்பட்டனர்.
பரம்பிக்குளம் வனப்பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் திறப்பு விழாவிற்கு வரும் கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து, ம.தி.மு.க., மற்றும் பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் கறுப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 31 பேரை கைது செய்தனர். அணைப்பகுதியில் காவல் நிலையம் திறந்தால், முல்லை பெரியாறு அணை போன்று பரம்பிக்குளம் அணையிலும் பிரச்னை ஏற்படும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.