ADDED : பிப் 18, 2024 05:56 AM
சென்னை: அமைப்புசாரா தொழி லாளர் நல வாரியத்தில், ஆவணங்கள் மாயமானதால், இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, மாவட்டங்களில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில், தொழிலாளர் களின் விண்ணப்பங்கள் மற்றும் கேட்பு மனுக்கள், தொழிலாளர் துணை இணையதளம் வழியாக பெறப்படுகின்றன.
கடந்த ஆண்டு டிச., 2க்கு முன்பாக, தொழிலாளர்களால் விண்ணப்பிக்கப்பட்ட பதிவு, புதுப்பித்தல் மற்றும் கேட்பு மனுக்களின் ஆவணங்கள், 'சர்வர்' பழுது காரணமாக மாயமாகி உள்ளன.
எனவே, ஆவணங்கள் பதிவேற்றம் செய்ய ஏதுவாக, மாவட்டங்களில் உள்ள, தொழிலாளர் உதவி ஆணையர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகங்களில், சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தொழிலாளர்கள் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என, தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது.