ADDED : ஜன 09, 2024 02:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: இன்ஜின் பழுதாகி நடுக்கடலில் சிக்கிய ஆறு மீனவர்களை கடலோரக் காவல் குழும போலீசார் மீட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே சோலியக்குடி லாஞ்சியடியில் இருந்து நாராயணமூர்த்திக்கு சொந்தமான விசைபடகில் ஆறு மீனவர்கள் நேற்று அதிகாலை பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்றனர். மூன்று நாட்டிகல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது மதியம் 12:00 மணிக்கு அவர்களின் படகு இன்ஜினில் பழுது ஏற்பட்டது.
மீனவர்கள் சரி செய்ய முயற்சி செய்தும் பயனில்லாததால் தொண்டி கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். எஸ்.ஐ., அய்யனார், நுண்ணறிவு பிரிவு ஏட்டு இளைய ராஜா, போலீசார் தீபக்குமார், துளசிதாசன், கருணாநிதி ஆகியோர் ரோந்து படகில் சென்று அனைவரையும் மீட்டு படகை கயிற்றால் கட்டி கரைக்கு கொண்டு வந்தனர்.