ADDED : பிப் 19, 2025 07:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : சென்னையில் இருந்து மண்டபத்துக்கு நேற்று வந்த சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணி ஒருவர் வெடிகுண்டு கொண்டு வருவதாக காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு தகவல் கிடைத்தது. ஆனால் போலீசார் சோதனையில் புரளி என தெரிந்தது.
மேலும், கடலுார் மாவட்டம் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகன் தண்டாயுதபாணி, 31, பொய்யான தகவலை கூறி புரளி கிளப்பியதும் தெரிய வந்தது. தண்டாயுதபாணியை மானாமதுரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

