ADDED : செப் 27, 2011 11:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ஐகோர்ட் கிளைக்கு, வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீசார் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஐகோர்ட் கிளையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, நேற்று மதுரை நகர போலீஸ் கமிஷனருக்கு, போனில் மர்மநபர் தகவல் தெரிவித்தார். இதுகுறித்து சோதனையிடும்படி, கமிஷனர் கண்ணப்பன் உத்தரவிட்டார். மோப்ப நாய் உதவியுடன், வெடிகுண்டு தடுப்பு போலீசார், நேற்று பகல் ஐகோர்ட் கிளை முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதையடுத்து, ஐகோர்ட் கிளை வளாகத்தில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஐகோர்ட்டிற்குள், பலத்த சோதனைக்குப் பிறகே மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.