முதல்வர் ஸ்டாலின், நடிகை த்ரிஷா வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்மநபர்களுக்கு போலீசார் வலை
முதல்வர் ஸ்டாலின், நடிகை த்ரிஷா வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்மநபர்களுக்கு போலீசார் வலை
UPDATED : அக் 03, 2025 09:09 AM
ADDED : அக் 03, 2025 08:56 AM

சென்னை: முதல்வர் ஸ்டாலின் மற்றும் நடிகை த்ரிஷா வீடுகளுக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர்.
சென்னையில் உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினின் வீடு, தமிழக பாஜ தலைமையகம் மற்றும் நடிகை த்ரிஷாவின் வீடு ஆகியவற்றை மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. பின்னர் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடத்தினர். சோதனை முடிவில் இந்த மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நடிகர் எஸ்வி சேகர் வீட்டிற்கும் மிரட்டல் வந்துள்ளது. போலீசார் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.