UPDATED : நவ 25, 2026 07:26 PM
ADDED : நவ 25, 2026 07:26 PM
சென்னை: தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 55 லட்சத்து, 93,170 மாணவர்களுக்கு, 103.81 கோடி ரூபாயில், புத்தகப்பை கொள்முதல் செய்ய, டெண்டர் வெளியிடப்பட்டு உள்ளது.
சிறியது, நடுத்தரம், பெரியது என, மூன்று விதமான புத்தகப்பை, மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. புத்தகப்பை தயாரிக்கும்போது, 10,000 பைகளுக்கு, 10 மாதிரி பைகள் வினியோகிக்கும்போது, 7,000 பைகளுக்கு ஒரு பை ஆய்வக சோதனை செய்யப்படும். இதில், தரம் குறைவாக இருந்தால், அனைத்து பைகளும் நிராகரிக்கப்படும். கூடுதல் செலவின்றி சம்பந்தப்பட்ட நிறுவனம், மாற்று பைகளை வழங்க வேண்டும். அத்துடன், 10 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என, பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பைகளின் உட்புறம், பள்ளிக்கல்வித் துறை ‘லோகோ’ தவிர, யாருடைய படமும் இடம் பெறாது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
