sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பிறந்தது புத்தாண்டு 2024: பல்வேறு நகரங்களில் மக்கள் கொண்டாட்டம்

/

பிறந்தது புத்தாண்டு 2024: பல்வேறு நகரங்களில் மக்கள் கொண்டாட்டம்

பிறந்தது புத்தாண்டு 2024: பல்வேறு நகரங்களில் மக்கள் கொண்டாட்டம்

பிறந்தது புத்தாண்டு 2024: பல்வேறு நகரங்களில் மக்கள் கொண்டாட்டம்

5


UPDATED : ஜன 01, 2024 12:55 AM

ADDED : ஜன 01, 2024 12:02 AM

Google News

UPDATED : ஜன 01, 2024 12:55 AM ADDED : ஜன 01, 2024 12:02 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 2023ம் வருடம் முடிந்து 2024 புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டு பிறந்ததை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் எலியர்ட்ஸ் கடற்கரைகளில் இளைஞர்கள், இளைஞிகள், சிறியவர்கள், பெரியவர்கள் என கேக் வெட்டியும், டான்ஸ் ஆடியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Image 1214101


2024 புத்தாண்டை வரவேற்க சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் தேவாலயங்களிலும், கோவிலிலும் வழிபட்டனர். இதைத்தவிர நட்சத்திர விடுதிகள், பூங்காக்கள், ரிசார்ட்களிலும் மக்கள் ஒன்றகாக கூடி புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடி வரவேற்றனர்.

Image 1214102


புத்தாண்டு கொண்டாட்டத்தை கண்காணிக்க போலீசார், சென்னை நகர் முழுவதும் 132 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியுள்ளனர். 108 இடங்களில் வாகன தணிக்கை நடந்தது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கடலில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது. மெரினா கடற்கரைக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் பொதுமக்கள் மெரினா கடற்கரையில் ஆங்காங்கே கூடி புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர்.

Image 1214103


விடுதி மற்றும் உணவகங்களில் இரவு 1 மணி வரை மட்டுமே புத்தாண்டு கொண்டாட போலீசார் அனுமதி வழங்கினர்.

Image 1214104


தமிழகத்திலக சென்னையை தவிர கோவை, சேலம் மதுரை திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியில் சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் கடற்கரையில் ஒன்று கூடி ஆங்கில புத்தாண்டை வரவேற்றனர்.

ஆங்கல புத்தாண்டை முன்னிட்டு சேலம் நான்கு ரோடு குழந்தை இயேசு பேராலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்தவர்கள் வழிபாடு நடத்தினர்.






      Dinamalar
      Follow us