சென்னை மின்சார ரயில் மீது பாட்டில் வீச்சு; திடீர் பரபரப்பு
சென்னை மின்சார ரயில் மீது பாட்டில் வீச்சு; திடீர் பரபரப்பு
ADDED : ஜன 05, 2026 04:37 PM
சென்னை: அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயில் மீது வியாசர்பாடி அருகே மர்ம நபர்கள் பாட்டில் வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி மின்சார ரயில் வந்தது.வியாசர்பாடி அருகே வந்தபோது மர்ம நபர்கள் ரயில் மீது பாட்டில்களை வீசினர். இதில் ரயிலில் பயணம் செய்த மூன்று பயணிகள் பலத்த காயமடைந்தனர்.
அவர்களுக்கு தலை மற்றும் கையில் பாட்டில் கிழித்து காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த பயணிகளுக்கு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர்.

