UPDATED : அக் 18, 2026 08:50 PM
ADDED : அக் 18, 2026 08:46 PM
இசையமைப்பாளர் ஸ்ரீ காந்த் தேவா அளித்த பேட்டி:
இசையமைப்பாளர் தேவாவிற்கு மணி மண்டபம் கட்டப்படும். ஒத்துழைப்பு வழங்கிய ஊர் பொதுமக்கள் , கலெக்டர், பாதுகாப்பு வழங்கிய போலீசார் ஆகியோருக்கு நன்றி. வெளிநாடுகளில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் நான், சித்தப்பா மற்றும் பாடகர்கள் மூலம் நிறைவேற்றப்படும். ஒரு சூரியன், ஒரு சந்திரன் போல அவரை போல வரமுடியாது. தமிழக மக்கள் மற்றும் வெளிநாட்டு மக்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.
தள்ளுமுள்ளு
இசையமைப்பாளர் தேவாவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சக்கரமல்லுார் கிராமத்தில் உள்ள இசையமைப்பாளர் தேவாவின் பண்ணை வீட்டில் குவிந்தனர். அங்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்யாததால், போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே அடிக்கடி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
