தாம்பரம் அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் படுகாயம்
தாம்பரம் அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் படுகாயம்
ADDED : ஜன 04, 2024 10:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்: துப்பாக்கி சுடும் பயிற்சிப் பள்ளியில், குண்டு பாய்ந்ததில் 7 ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தாம்பரம் அடுத்த முடிச்சூரில் துப்பாக்கி சுடும் பயிற்சி பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில், 7 ம் வகுப்பு படிக்கும் சித்தார்த்(13) என்ற சிறுவன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஏர்கன்னில் இருந்து வெளிவந்த அலுமினிய குண்டு குறி தவறி பக்கவாட்டு சுவரில் மோதி திரும்பி வந்து சித்தார்த் கழுத்தில் பாய்ந்தது.
இதில் காயமடைந்த அந்த சிறுவன், குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சம்பவம் தொடர்பாக மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.