உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 07:06 PM
அ நிறம் | அளவு
ஓசூர்: ஓசூரில், மாடியிலிருந்து தவறி விழுந்த சஞ்சய், 21, பலியானார். அவரது காதலி சக்தி, 20, சிகிச்சையில் உள்ளார்.
தர்மபுரி மாவட்டம், நல்லப்பநாயக்கனஹள்ளியை சேர்ந்தவர் சஞ்சய், 21. மொரப்பூர் அடுத்த, புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சக்தி. காதலர்களான இருவரும், கிருஷ்ணகிரி மாவட்டம், கர்னுாரில் தங்கி, வேலை தேடினர்.
நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, கட்டடத்தின், மூன்றாவது மாடியில் இருவரும் பேசி கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக சக்தி, மாடியிலிருந்து கீழே தவறி விழுந்தார். அவரை பிடிக்க முயன்ற சஞ்சயும் கீழே விழுந்து, சம்பவ இடத்திலேயே பலியானார்.
படுகாயமடைந்த சக்தி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
