sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆறு தொகுதிகளில் பிராமணர் வேட்பாளர்கள்: சீமான் புது முயற்சி

/

ஆறு தொகுதிகளில் பிராமணர் வேட்பாளர்கள்: சீமான் புது முயற்சி

ஆறு தொகுதிகளில் பிராமணர் வேட்பாளர்கள்: சீமான் புது முயற்சி

ஆறு தொகுதிகளில் பிராமணர் வேட்பாளர்கள்: சீமான் புது முயற்சி

44


UPDATED : பிப் 24, 2026 11:15 PM

ADDED : பிப் 24, 2026 06:07 AM

Google News

44

UPDATED : பிப் 24, 2026 11:15 PM ADDED : பிப் 24, 2026 06:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சட்டசபை தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில், ஆறு தொகுதிகளுக்கு, பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை, கடந்த 21ம் தேதி திருச்சியில் நடந்த மாநாட்டில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார். வேட்பாளர்களில் 50 சதவீதம் பேர், அதாவது 117 தொகுதிகளில் பெண்கள் போட்டியிடுகின்றனர்.

தமிழகத்தில் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த யாரையும் வேட்பாளராக தேர்தலில் நிறுத்துவதில்லை. அ.தி.மு.க., - பா.ஜ., போன்ற கட்சிகள் தான், ஒரு சில தொகுதிகளில் பிராமண சமுதாயத்தினருக்கு வாய்ப்பளித்து வருகின்றன.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ள வேட்பாளர்களில் ஆறு பேர் பிராமண சமுதாயத்தினர்.

சென்னை தி.நகரில் அனுஷா; மயிலாப்பூரில் அருண்; சைதாப்பேட்டையில் ஸ்ரீவித்யா; ஆலந்துாரில் மகாலட்சுமி; மதுரவாயலில் ரேவதி; மயிலாடுதுறையில் காசிராமன் என ஆறு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

இதை வரவேற்றுள்ள நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான எஸ்.வி.சேகர், 'இது சீமானின் சமூக நீதி' என பாராட்டி உள்ளார்.

ஆனால், ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், 'சமூக, கலாசார பண்பாட்டு பெருமை மிக்க பிராமண சமுதாய மக்களின் ஓட்டுகளை, பா.ஜ., - அ.தி.மு.க.,விடம் இருந்து பிரித்து, தன் பக்கம் கொண்டு செல்ல, சீமான் மேற்கொண்டுள்ள முயற்சியே பிராமண வேட்பாளர்கள்.'இது, தி.மு.க.,வை வெற்றி பெற வைக்கும் யுக்தி. இவர்கள் என்ன கதறினாலும், படித்த, பண்பட்ட பிராமண சமூகத்தினர், இவர்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள்' என தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us