உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : டிச 11, 2024 02:54 AM
அ நிறம் | அளவு
பழநி,:தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர் பிறந்த நாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாட மாநில அரசு அனுமதியளித்ததற்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் பாராட்டு தெரிவித்துள்ளது.
சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கே.பி.முனுசாமி தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர், தமிழுக்கு ஆற்றிய தொண்டினையும், புகழையும் எடுத்து கூறினார்.
அவரது பிறந்த நாளை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக அரசு கொண்டாட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அதை ஏற்று முதல்வர் ஸ்டாலின், தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி விழா கொண்டாடப்படும் என அறிவித்தார். இதற்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் மாநிலத்தலைமை சார்பில் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து மாநிலத்தலைவர் ஹரிஹரமுத்து அய்யர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
