கும்பகோணத்தில் 22ல் கூடுகிறது பிராமண சங்க பொதுக்குழு
கும்பகோணத்தில் 22ல் கூடுகிறது பிராமண சங்க பொதுக்குழு
ADDED : டிச 20, 2024 12:35 AM
சென்னை:தமிழ்நாடு பிராமண சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பம்மல் ராமகிருஷ்ணன் அறிக்கை:
தமிழ்நாடு பிராமண சங்கத்தின் 15வது மாநில பொதுக்குழு கூட்டம், கும்பகோணம் ஸ்ரீராயர் மஹாலில், நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை நடக்கவுள்ளது.
பொதுக்குழு நடக்கும் அதே மண்டபத்தில், மாலை 3:00 மணியளவில் தமிழ்நாடு பிராமண சங்கத்தின் 45வது துவக்க விழா நடக்கும். கும்பகோணம் முன்னாள் எம்.எல்.ஏ., மறைந்த காசிராமன் நுாற்றாண்டு விழா, வரும் 2025ல் நடக்கவுள்ளது.
அதையொட்டி, சிட்டி யூனியன் வங்கி நிர்வாக இயக்குனர் காமகோடி, ஸ்ரீநாராயணி நிதி நிறுவன தலைவர் கார்த்திகேயன், தொழிலதிபர்கள் பாலாஜி, வைத்தியநாதன், பிரதீப்குமார், பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா, மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன், கும்பகோணம் எம்.எல்.ஏ., அன்பழகன் உள்ளிட்டோர் கவுரவிக்கப்பட உள்ளனர்.
நடப்பு அரசியல் சூழ்நிலையில், முக்கிய தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ளன. சங்கத்தின் மாநில தலைவர் கணேசன், செயலர் ஈரோடு சங்கர் ராமநாதன், பொருளாளர் திருவொற்றியூர் ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.