தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ காலை உணவு திட்ட விரிவாக்கம்: நிதி ஒதுக்கீட்டில் சர்ச்சை

 காலை உணவு திட்ட விரிவாக்கம்: நிதி ஒதுக்கீட்டில் சர்ச்சை

 காலை உணவு திட்ட விரிவாக்கம்: நிதி ஒதுக்கீட்டில் சர்ச்சை


ADDED : ஜூலை 23, 2026 10:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 10:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: காமராஜர் காலை உணவு திட்டத்திற்கு, ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் முன்னேற்றத்திற்கான, சிறப்பு செயல் திட்ட நிதியை ஒதுக்கி இருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் முழுதும் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில், 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, காலை உணவு வழங்கும் திட்டம், தி.மு.க., ஆட்சியில் அமல்படுத்தப்பட்டது.

இத்திட்டம் முதல்வரின் காலை உணவு திட்டம் என அழைக்கப்பட்டது. தற்போது காமராஜர் காலை உணவு திட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

மேலும், இத்திட்டத்தை 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, செப்., 17 முதல் விரிவாக்கம் செய்ய, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதற்கான, அரசணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

அதில், ஆண்டு தோறும் இத்திட்டத்திற்கு, 343 கோடி ரூபாய் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, செப்.,17 முதல் கணக்கிடும் போது, நடப்பாண்டுக்கு 217.63 கோடி ரூபாய் செலவாகும் என கணக்கிட்டு, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதாவது, பொதுபிரிவில் இருந்து 134.45 கோடி; ஆதிதிராவிடர்கள் முன்னேற்றத்திற்கான சிறப்பு செயல் திட்டத்திற்கு ஒதுக் கப்பட்ட நிதியிலிருந்து, 63.15 கோடி; பழங்குடியினர் முன்னேற்றத்திற்கான சிறப்பு செயல் திட்டத்தின் கீழ் 6.11 கோடி; சிறப்பு பணிக்கான தொகையிலிருந்து 13.91 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் முன்னேற்றத்திற்கான, சிறப்பு செயல் திட்டத்திற்கான நிதியிலிருந்து, காலை உணவு விரிவாக்க திட்டத்திற்கு நிதி ஒதுக்கி இருப்பது, சர்ச் சையை ஏற்படுத்தி உள்ளது .

இதற்கு, அ.மு.ம.க., பொதுச் செயலர் தினகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us