ADDED : ஜூன் 19, 2023 11:49 AM

அ நிறம் | அளவு
திருச்சி: திருச்சிக்கு வந்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி இன்று(ஜூன் 19) காலையில், திருச்சி, மரக்கடை பகுதியில் அமைந்துள்ள சையத் முர்துஸா மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தையும் பார்வையிட்டு, உணவின் தரம் சரியாக இருக்கிறதா? மாணவர்களுக்கு சரியான அளவில் வழங்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்தார். அப்போது பள்ளி மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உதயநிதி காலை உணவு சாப்பிட்டார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், மாவட்ட கல்வி அலுவலர் சிவக்குமார் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
