ADDED : அக் 12, 2025 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதை செயல்படுத்த, நுாறு குழந்தைகள் உள்ள பள்ளிகளில் காலை உணவு பெற்று பரிமாற மாதம் 1,100 ரூபாய் சம்பளத்திற்கு பணிப்பெண் நியமிக்க உத்தரவிடப்பட்டது.
சாதாரண வீடுகளில், ஒரு மணி நேர பணி செய்யும் பெண்களுக்கு, மாதம் 3,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கும் நிலையில், மூன்று மணி நேர வேலைக்கு, குறைந்தது, 5,000 ரூபாய் மாதச் சம்பளம் வழங்க வேண்டும். ஆனால், 1,100 ரூபாய் சம்பளம் என்பது, அவர்களுடைய உழைப்பைச் சுரண்டுவதற்குச் சமம். அந்த குறைந்த சம்பளத்தையும், இரண்டு மாதங்களுக்கு மேல் வழங்காமல் இருப்பது, தொழிலாளர் நலச் சட்டத்திற்கு எதிரான செயல். தனியாருக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் முன்மாதிரியாக விளங்க வேண்டிய அரசு, தொழிலாளர் விரோதச் செயலில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. முதல்வர் தலையிட்டு, பிரச்னையை தீர்க்க வேண்டும். - பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர்