ADDED : ஜன 31, 2026 06:39 AM

தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி, 200 இடங்களில் வெற்றி பெறும். முன்னாள் முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கொத்தடிமையாக இருக்கிறார். பாரதிதாசன் பல்கலையில், கவர்னர் ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் இசைக்காமல், தேசிய கீதத்தை முதலில் இசைத்து விட்டு, அதன்பின் தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தது கண்டனத்துக்குரியது.
மற்ற பல்கலைகளிலும், துணைவேந்தர்கள் இதை பின்பற்றக்கூடாது. தடுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பதவியேற்ற நாளில் இருந்தே, ஆர்.எஸ்.எஸ்., ஏஜன்டாக கவர்னர் ரவி, தமிழகத்தில் செயல்பட்டு வருகிறார். கவர்னர் பதவியே வேண்டாம் என்பது தான் எங்கள் நிலை. கவர்னர் ரவி அத்துமீறி செயல்படுகிறார். மரபுகளை உடைத்து சமஸ்கிருதத்தை திணிக்கும் வேலையை மறைமுகமாக செய்து வருகிறார்.
- வைகோ
பொதுச்செயலர், ம.தி.மு.க.,

