PUBLISHED ON : மே 15, 2023 12:00 AM

அரசுத்துறைகளில் நீக்கமற நிறைந்திருக்கிறது லஞ்சம். துறைவாரியாக, ஒவ்வொரு பணிக்கும் குறைந்தபட்ச லஞ்சத் தொகை உண்டு. அந்தத் தொகையும் மாறுதலுக்கு உட்பட்டது. பணியின் அவசரம், மதிப்பு, சிக்கலைப் பொறுத்து, லஞ்ச தொகை மாறுபடும். மக்கள் அதிகம் செல்லும் சில அலுவலகங்களில், இன்றைய லஞ்ச மார்க்கெட் நிலவரத்தைப் பார்ப்போம்…...
லஞ்சத்தின் ஆட்சி! பறிக்கும் மாநகராட்சி
தமிழகம் முழுவதும் மாநகராட்சி மற்றும் நகர ஊரமைப்பு துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் லஞ்சம் தாண்டவமாடுகிறது. அரசு அலுவலகங்களில் ஒவ்வொரு இடத்துக்கு ஏற்ப லஞ்சத்தொகை மாறும். இருப்பினும் இங்கே குறைந்தபட்ச 'லஞ்ச மார்க்கெட்' நிலவரத்தை மட்டுமே குறிப்பிடுகிறோம். விண்ணப்பதாரர்களின் பணபலத்தை பொறுத்தும் அதிகாரிகளின் 'வேட்டையை' பொறுத்தும் இத்தொகை மாறுபடக்கூடும்.
இந்த வேலை - இன்ன ரேட் (ரூபாயில்)
வரைபட அனுமதி (ச.அடி) - 60-100
வர்த்தக நிறுவனங்கள் (ச.அடி) - 80
அடுக்குமாடி குடியிருப்பு (ச.அடி) - 100
நில உபயோகம் வகைமாற்றம் (ஏக்கருக்கு) - 3 - 5 லட்சம் வரை
நில அளவை பதிவேடு நகல் பெற - 2,000 - 3,000
சர்வேயர் அறிக்கை - 10,000
பட்டா பெயர் மாறுதலுக்கு - வி.ஏ.ஓ., அலுவலகம்; 5,000. தாலுகா அலுவலகம்; 5,000-10,000.
மாநகராட்சியில் - வரைபட அனுமதி (ச.அடி); 20. வர்த்தக நிறுவனம் (ச.அடி); 35.
சொத்து வரி (ச.அடி) - 50
சொத்து வரி பெயர் மாற்றம் - 5,000
லே-அவுட் அப்ரூவலுக்கு (ஏக்கருக்கு) - 6,00,000
குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு - 50,000
பிறப்பு, இறப்பு சான்று - 2,000
தொழில் உரிமம் - 2,000 - 5,000
(சமீபகாலமாக, கவுன்சிலர்களுக்காக ஒரு தொகை விண்ணப்பதாரர்களிடம் வசூலித்துக் கொடுக்க, மாநகராட்சி அலுவலர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது)
லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள், மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையிடம் புகார் அளிக்கலாம்.
தொடரும்...