ADDED : ஜன 08, 2026 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கறிக்கோழி பண்ணை விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.
கறிக்கோழி பண்ணை களுக்கு, கட்டணமில்லா மின் சாரம் வழங்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த போராட்டம் நடந்தது.
கால்நடை பராமரிப்பு துறை சார்பில், 'வரும் 21ம் தேதி கறிக்கோழி நிறுவனங்கள் மற்றும் பண்ணை விவசாயிகளுடன், பேச்சு நடத்த ஏற்பாடு செய்யப்படும்' என, இயக்குநர் அம்ரித் உறுதியளித்தை தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

