ADDED : அக் 22, 2024 11:50 PM
சென்னை:பி.எஸ்.என்.எல்., நிறுவனம், 'பாரத் பைபர், பிராட் பேண்ட்' உட்பட பல சேவைகளை, மக்களுக்கு வழங்கி வருகிறது. இந்த சேவைகளில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இதுதொடர்பாக பாதிக்கப்படுவோர், 'ஆன்லைனில்' புகார் அளிக்கும் போது, வாடிக்கையாளர்களின் மொபைல் போன் எண்ணுக்கு, புகார் பதிவு எண் எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படுகிறது.
அதில், சரி செய்ய வரும் ஊழியரின் பெயர், மொபைல் போன் எண் இடம் பெறும். சமீப காலமாக, ஓய்வு பெற்ற பணியாளர்களின் மொபைல் போன் எண்கள், எஸ்.எம்.எஸ்., தகவலில் அனுப்பப்படுகின்றன.
சேவை குறைபாட்டால் பாதிக்கப்படுபவர்கள் அந்த எண்களை தொடர்பு கொள்ளும் போது, 'நான் ஓய்வு பெற்று விட்டேன்' என்று, இணைப்பை துண்டிக்கின்றனர். இதனால், தாங்கள் சந்திக்கும் பிரச்னைக்கு தீர்வு காண முடியாமல், சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

