தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/3 கடமையை மனதில் வைத்து பட்ஜெட் உருவாக்கம்: பார்லியில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

3 கடமையை மனதில் வைத்து பட்ஜெட் உருவாக்கம்: பார்லியில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

3 கடமையை மனதில் வைத்து பட்ஜெட் உருவாக்கம்: பார்லியில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு


UPDATED : பிப் 01, 2026 11:37 AM

ADDED : பிப் 01, 2026 11:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 01, 2026 11:37 AM ADDED : பிப் 01, 2026 11:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: மக்கள் நலன், அனைவருக்கும் அனைத்தும் மற்றும் இளைஞர்கள் நலன் ஆகிய

3 கடமைகளை மனதில் வைத்து இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டு உள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2026 - 27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 01) காலை 11:00 மணிக்கு தாக்கல் செய்தார். தொடர்ச்சியாக ஒன்பது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றார். பட்ஜெட் தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

* புனிதமான தைப்பூச நாளில் நாட்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளேன். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் பட்ஜெட்டை உருவாக்கி இருக்கிறோம். இளைஞர்களின் கரங்களை வலுப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும்.

* தன்னிறைவு இந்தியா என்ற இலக்கை நோக்கி நாம் வேகமாக முன்னேறி வருகிறோம். பணவீக்கத்தை முறையாக கட்டுப்படுத்தியதால் நாட்டின் வளர்ச்சி மேம்பட்டுள்ளது.

* இளைஞர்களின் கரங்களை வலுப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் அமையும்.

* தமிழகம், கேரளா, ஒடிசாவில் அரிய வகை கனிமங்களை ஆய்வு செய்ய மையம் அமைக்கப்படும். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு முதலீட்டு வரம்பு 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக ஆக உயர்த்தப்படும்.

* பாஜ ஆட்சியில் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்துள்ளோம். இந்திய பொருளாதாரம் சீரான வேகத்தில் முன்னேறுகிறது. சீர்த்திருத்தங்களால் மக்கள் பலன் அடைந்துள்ளனர்.

* பாஜ அரசின் நடவடிக்கையால், இந்திய பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக அதிகரித்துள்ளது. அரசின் நடவடிக்கையால் மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது.

* நீண்ட கால தொழில்முதலீட்டு திட்டங்களை தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்தி வருகிறோம்.

* வளர்ச்சியின் பலன் அனைத்து தரப்பு மக்களையும் செல்வதை உறுதி செய்கிறோம்.

* மக்கள் நலன், அனைவருக்கும் அனைத்தும் மற்றும் இளைஞர்கள் நலன் ஆகிய 3 கடமைகளை மனதில் வைத்து இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

தினமலர் நேரலை!

பார்லிமென்டில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள அறிவிப்புகளும், நிர்மலா சீதாராமன் உரையும் தினமலர் யுடியூப், வெப்சைட் உள்ளிட்ட இணையதளத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us