ADDED : ஜூன் 11, 2024 06:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டிலிருந்து தேனிக்கு புறப்பட்ட அரசு பஸ், பிரேக் பிடிக்காமல் நேற்று முன்தினம் மதியம் ரோட்டோர கடைகளுக்குள் புகுந்தது. இதில், டிரைவர் பழனிசாமி காயமடைந்தார்.
இதுதொடர்பாக, திண்டுக்கல் மண்டல போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அரசு பஸ்சில் எந்த கோளாறும் இல்லை. கவனக்குறைவாக பஸ்சை இயக்கியதால் தான் விபத்து நடந்ததாக கூறி டிரைவர் பழனிசாமியை போக்குவரத்து கழக நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.