நிறுத்தப்பட்ட 22 தடங்களில் இன்றுமுதல் பஸ்கள் இயக்கம்
நிறுத்தப்பட்ட 22 தடங்களில் இன்றுமுதல் பஸ்கள் இயக்கம்
ADDED : மார் 18, 2024 01:27 AM
சேலம்: தமிழகத்தில் கொரோனாவின் போது, 40க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்ட எஸ்.இ.டி.சி., பஸ்களை நிர்வாகம் திடீரென நிறுத்தியது. பிற போக்குவரத்து கழகங்களும் பஸ்களை நிறுத்தின.
ஆனால், லோக்சபா தேர்தலை முன்னிட்டு போக்குவரத்து அமைச்சர், உள்ளூர் அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள் வாயிலாக ஒரு மாதத்தில், 118 தடங்களில் பஸ்கள் மீண்டும் இயக்கப்பட்டன.
அதேபோல், விரைவு போக்குவரத்து கழகத்திலும் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், எந்த அறிவிப்பின்றி, நிறுத்தப்பட்ட தடங்களில் இன்று முதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து வேலுார் வழியே திருச்சூர், கோவை; கல்பாக்கம் வழியே பெங்களூரு; கோவையில் இருந்து புதுச்சேரி வழியே சென்னை.
சென்னையில் இருந்து கும்பகோணம்; மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி; செங்கோட்டையில் இருந்து மதுரை, பொள்ளாச்சி, பாலக்காடு வழியே எர்ணாகுளம்;
மதுரையில் இருந்து புதுச்சேரி வழியே சென்னை; திருச்செந்துாரில் இருந்து துாத்துக்குடி, பொள்ளாச்சி, பாலக்காடு வழியே குருவாயூருக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அதிகாரிகள் கூறுகையில், 'கொரோனாவின் போது நிறுத்தப்பட்ட தடங்களில் மீண்டும் பஸ்களின் இயக்கம் துவக்கப்படுகிறது. அடுத்தகட்டமாக, 18 தடங்களில் பஸ்களின் இயக்கம் துவங்கும்' என்றனர்.

