ADDED : ஜூலை 20, 2011 04:47 PM
சென்னை: சென்னையில் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண் தொழில் அதிபர்களுக்கான பயிலரங்கம் நடைபெற்றது.
வெற்றிகரமான தொழில் அதிபர்களுக்கான புதிய தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பயிலரங்கிற்கு ஈகுட்டாஸ் மைக்ரோ நிதி நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு அறிவியல் நகரம் என்ற அமைப்பு செய்திருந்தது. இதில் சுமார் 100 பெண்கள் பங்கேற்றனர். இந்த பயிலரங்கை கவர்னரின் முதன்மை செயலாளர் சி.கே.கரியாலி துவக்கி வைத்தார். அறியல் நகரத்தின் துணைத்தலைவர் வி.கே சுப்புராஜ் பேசுகையில், பெரும்பாலான பெண்கள் ஒரு நெருக்கடியைச் சந்திக்கும் வரை தங்களுடைய திறமையை உணர்வதில்லை. நெருக்கடியைச் சந்தித்த பிறகு அவர்கள் அதைச் சமாளிக்க புதிய வழிகளைக் கையாண்டு வெற்றி பெறுகிறார்கள். ஒரு நிறுவனத்தை தலைமையேற்று நடத்த, கல்வியில் சிறந்து விளங்க வேண்டியது அவசியமில்லை. முன்னாள் டிஜிபி எஸ்.பி.மாத்தூர் பேசுகையில், சுய உதவிக் குழுக்கள் சிறந்த தொழில் அதிபர்ள் துறையாக செயல்பட்டு வருகிறது. அவர்கள் எப்போதும் உரிய நேரத்தில் தங்கள் கடனைச் செலுத்தி வருகின்றனர் என்றார்.