தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 'ஜியோ செட்டாப் பாக்ஸ்' வாங்கி கணினியாக பயன்படுத்தலாம்

'ஜியோ செட்டாப் பாக்ஸ்' வாங்கி கணினியாக பயன்படுத்தலாம்

'ஜியோ செட்டாப் பாக்ஸ்' வாங்கி கணினியாக பயன்படுத்தலாம்


ADDED : ஜூலை 31, 2025 12:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2025 12:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனது ஜியோ பி.சி., எனும் செயற்கை நுண்ணறிவுடன் கூடிய, 'க்ளவுட்' கணினி வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதில், 50,000 ரூபாய் கொடுத்து வாங்கும் கணினியில் இருக்கும் சிறப்பம்சங்கள் அனைத்தையும் பெற இயலும். இதற்கான கட்டணம், மாதம் 400 ரூபாயில் இருந்து துவங்குகிறது. இதை பயன்படுத்த, ஜியோவின் இணையதள 'செட்டாப் பாக்ஸ்' இருந்தால் போதும்.

அதில் உள்ள ஜியோ பி.சி., என்ற வசதியை 'க்ளிக்' செய்து, கணினியாக பயன்படுத்த முடியும்.

இதன் வழியே, 'டிவி'யை ஸ்மார்ட் கணினியாக மாற்றும் வசதி உள்ளது. படங்களை எடிட் செய்யும் அடோப் உட்பட, பல்வேறு மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கின்றன. கூடுதல் விபரங்களை www.jio.com/jiopc இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us