தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட்

இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட்

இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட்


UPDATED : நவ 06, 2026 07:21 PM

ADDED : நவ 05, 2026 10:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:21 PM ADDED : நவ 05, 2026 10:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலுார்:

கூடலுாரில் விசாரணைக்கு ஆஜராக, திருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து கூடலுார் கோர்ட் உத்தரவிட்டது.

நீலகிரி மாவட்டம், கூடலுார் ஓவேலி பகுதியில், 2017ல் நடந்த நகை திருட்டு தொடர்பாக அப்போதைய நியூஹோப் இன்ஸ்பெக்டர் (பொ) சக்திவேல், வழக்கு பதிவு செய்து, குற்றவாளியை கைது செய்தார். இவர் தற்போது திருப்பூரில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராக வேண்டி, பலமுறை அவருக்கு சமன் அனுப்பியும் ஆஜராகவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று கூடலுார் மாஜிஸ்திரேட் கோர்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இன்ஸ்பெக்டர் சக்திவேல் கோர்ட்டில் ஆஜராக ஆகாததால், அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து மாஜிஸ்திரேட் சரவணகுமார் உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us