உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 06:14 PM
அ நிறம் | அளவு
சென்னை: மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளில், இன்று இடைத்தேர்தல் நடக்கிறது.
அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்யாபாமா ஆகியோர், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க.,வில் இணைந்தனர். இதனால், அந்த இரண்டு தொகுதிகளுக்கு, இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. இருவரும் த.வெ.க., சார்பில், மீண்டும் போட்டியிடுகின்றனர். தி.மு.க.,– அ.தி.மு.க.,– நாம் தமிழர்– கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பிலும், வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மதுராந்தகத்தில், 2.13 லட்சம் பேர் ஓட்டளிப்பதற்காக, 285 ஓட்டுச்சாவடிகள்; தாராபுரத்தில் 2.23 லட்சம் பேர் ஓட்டளிக்க, 320 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 7:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை, ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.
