ADDED : ஜன 19, 2024 09:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக அமைச்சரவை கூட்டம், வரும் 23ம் தேதி நடக்க உள்ளது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் விரைவில் துவங்க உள்ளது. இதுகுறித்து முடிவு செய்வதற்காக, வரும் 23ம் தேதி காலை 11:00 மணிக்கு, தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் கூட்டத்தில், அனைத்து அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர்.
கூட்டத்தில், சட்டசபை கூட்டம், பட்ஜெட், தொழில் முதலீடு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து, முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.