ADDED : மார் 17, 2024 07:25 AM

திண்டுக்கல் தேர்தல் பணிக்கான நிலையான கண்காணிப்புக்கு குழு, பறக்கும்படைக்கான கேமரா பொருத்தப்பட்ட வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன.
லோக்சபா தேர்தல் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் 10 நாட்களுக்கு முன்னதாகவே பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு, பிரசார வீடியோ குழு, செலவின குழு என பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு அதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது .
சட்டசபைத் தொகுதி வாரியாக தலா 3 தேர்தல் பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழு 8 மணி நேரம் என்ற கணக்கில் 24 மணி நேரமும் தொடர் பணியில் ஈடுபடும். பறக்கும் படையினரோடு ஒரு வீடியோகிராபர் இருப்பார். அனைத்து நிகழ்வுகளையும் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பறக்கும் படையினர் ,நிலையான கண்காணிப்புக் குழுவினர் பயன்படுத்தும் வகையில் கேமரா பொருத்தப்பட்ட 24 வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த கேமராக்கள் மூலம் தேர்தல் கட்டுப்பாட்டு அறையிலிருக்கும் தனிக்குழுவும் கண்காணிக்க உள்ளது. விதிமுறை மீறல்களை முறைப்படி தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

