ADDED : மார் 19, 2024 03:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : 'லோக்சபா தேர்தலில், வேட்பாளர் ஒருவர், 95 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம்' என, தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும், வேட்பாளர் தேர்தல் செலவு உச்சவரம்பாக குறிப்பிட்ட தொகையை தேர்தல் ஆணையம் நிர்ணயம் செய்கிறது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலில், 2014ம் ஆண்டு 40 லட்சம் மற்றும் 2019ம் ஆண்டு 70 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய அனுமதிக்கப்பட்டது. நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், 95 லட்சம் ரூபாய், வேட்பாளர் செலவு உச்சவரம்பாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டசபை தொகுதியில், வேட்பாளர் 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம் என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

