கார் -- சரக்கு வேன் மோதல் கல்வி அதிகாரி, டிரைவர் பலி
கார் -- சரக்கு வேன் மோதல் கல்வி அதிகாரி, டிரைவர் பலி
ADDED : மார் 18, 2024 01:35 AM

ஆண்டிபட்டி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மல்லப்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கு முத்தையா, 60; தனியார் பள்ளிகளின் பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலர்.
விடுமுறை நாளான நேற்று சொந்த ஊருக்கு சென்றுவிட்டு, தன் காரில் தேனி திரும்பினார். டிரைவர் குமரேசன் காரை ஓட்டினார்.
மதியம், 3:30 மணிக்கு ஆண்டிபட்டி, டி.பொம்மிநாயக்கன்பட்டி விலக்கு அருகே சென்ற போது, தேனியில் இருந்து மதுரை நோக்கி சென்ற சரக்கு வேன், காருடன் நேருக்கு நேர் மோதியது.
விபத்தில் காரின் பின்புறம் அமர்ந்திருந்த சங்குமுத்தையா, டிரைவர் குமரேசன் காரிலேயே பரிதாபமாக பலியாகினர்.
ஆண்டிபட்டி போலீசார் இரு உடல்களையும் மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வேன் டிரைவர் மதுரையை சேர்ந்த மணிகண்டன், 33, படுகாயத்துடன் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

