உள்ளடக்கத்திற்கு செல்ல
கால்வாய் அடைப்பை சரி செய்த கார் டிரைவர் மின்சாரம் தாக்கி பலி
கால்வாய் அடைப்பை சரி செய்த கார் டிரைவர் மின்சாரம் தாக்கி பலி
ADDED : நவ 06, 2026 09:09 PM
அ நிறம் | அளவு
வாணியம்பாடி: வாணியம்பாடியில் கால்வாய் அடைப்வை சரி செய்த கார் டிரைவர் மின்சாரம் தாக்கி பலியானார்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ராமயன் தோப்பு பகுதியை சேர்ந்தவர், தனியார் நிறுவன தொழிலாளி பயாஸ் அஹமத், 45. இவருக்கு திருமணமாகி, இரு பிள்ளைகள் உள்ளனர். பயாஸ் அஹமத் இன்று (நவ.,6) காலை வீட்டின் வெளியே உள்ள கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டிருந்ததை, நீண்ட இரும்பு கம்பியால் கொண்டு சரி செய்து கொண்டிருந்தார்.
அப்போது, மின்கம்பியை துாக்கியபோது, தலைக்கு மேல் மின்கம்பத்திலிருந்த சென்ற மின்கம்பி மீது, இவர் வைத்திருந்த கம்பி பட்டு உரசியதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
