sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

டூ வீலர் மீது கார் மோதிய விபத்து: குழந்தைகள் உட்பட 3 பேர் பலி

/

டூ வீலர் மீது கார் மோதிய விபத்து: குழந்தைகள் உட்பட 3 பேர் பலி

டூ வீலர் மீது கார் மோதிய விபத்து: குழந்தைகள் உட்பட 3 பேர் பலி

டூ வீலர் மீது கார் மோதிய விபத்து: குழந்தைகள் உட்பட 3 பேர் பலி

3


ADDED : ஆக 13, 2025 08:29 PM

Google News

3

ADDED : ஆக 13, 2025 08:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்: தஞ்சாவூரில், கார் மோதியதில் ஒரே பைக்கில் சென்ற தந்தை மற்றும் இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் அருகே வல்லம் கொள்ளுப்பேட்டை தெருவை சேர்ந்த அறிவழகன்,37. இவரது மனைவி உஷா,35. இவர்களின் மகள்கள் ரூபா,10, பவ்யஸ்ரீ,9. அறிவழகனின் தங்கை மகள் தேஜாஸ்ரீ,4,. ஆகிய ஐந்து பேரும், டூ வீலரில் மாலை பனங்காடு பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று மீண்டும் ஊருக்கு திரும்பினர்.

அப்போது, மாதாக்கோட்டை பைபாஸ் பகுதியில் சென்ற போது, கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட7 பேர் நாகூர் தர்காவுக்கு சென்றுக்கொண்டு இருந்த இன்னோவா கார், அறிவழகன் ஒட்டிச்சென்ற டூ வீலர் மீது பின்னால் வந்து வேகமாக மோதியது. இதில், அறிவழகன், அவரது மகள் பவ்யஸ்ரீ மற்றும் அறிவழகனின் தங்கை மகள் தேஜா ஸ்ரீ ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

இவ்விபத்தில் அறிவழகன் மனைவி உஷா, மகள் ரூபா ஆகியோருக்கு காயமடைந்த நிலையில், தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழப்பல்கலைகழக போலீசார் வழக்கு பதிவு செய்து, கார் டிரைவரான கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ்,31, என்பவரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us