சென்னை மேம்பாலங்களில் தொடங்கியது கார் பார்க்கிங்!
சென்னை மேம்பாலங்களில் தொடங்கியது கார் பார்க்கிங்!
ADDED : டிச 12, 2024 02:34 PM

சென்னை: சென்னையில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருவதால் தெருக்கள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிப்போர், மேம்பாலங்களில் கார்களை பார்க்கிங் செய்ய தொடங்கியுள்ளனர்.
சென்னையில் முந்தைய ஆண்டுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் கார் உரிமையாளர்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கிய கார்கள் பழுதாகி, பல லட்சம் ரூபாய் செலவழிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் சமீப காலமாக, அதி கனமழை என்ற அறிவிப்பு வந்த உடனே மக்கள் உஷாராகி விடுகின்றனர். பாலங்களில் இடம் பிடித்து கார்கள், வாகனங்களை நிறுத்த தொடங்கி விடுகின்றனர்.
நேற்றிரவு முதல் சென்னையில் தொடர் மழை பெய்து வருவதால், கார் உரிமையாளர்கள் மத்தியில் அச்சம் பரவத் தொடங்கி விட்டது. இதனால் சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் ஏராளமான பேர் கார்களை நிறுத்தி வருகின்றனர். அதேபோல், ராயபுரம் மேம்பாலமும் கார் பார்க்கிங்காக மாறியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

