தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/தனியார் பள்ளி மாணவர்கள் சென்ற ஆட்டோ மீது கார் மோதி விபத்து

தனியார் பள்ளி மாணவர்கள் சென்ற ஆட்டோ மீது கார் மோதி விபத்து

தனியார் பள்ளி மாணவர்கள் சென்ற ஆட்டோ மீது கார் மோதி விபத்து


ADDED : நவ 04, 2026 01:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2026 01:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆரணி: ஆரணி அருகே தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில், 10 மாணவர்கள் காயமடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சேவூர் பகுதியில், சிங்கார வேலர் தனியார் மழலையர் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் படிக்கும், சேவூர் மற்றும் ரகுநாதபுரத்தை சேர்ந்த, 10 மாணவர்கள் தனியார் ஆட்டோவில் பள்ளி முடிந்து நேற்று மாலை, 5:00 மணி அளவில் ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, ஆரணி வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தபோது, வேலுாரிலிருந்து ஆரணி நோக்கி சென்ற டொயோட்டா கார், மாணவர்கள் சென்ற ஆட்டோவின் பின் பக்கம் மோதியதில், ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஆட்டோவில் பயணம் செய்து, 10 மாணவ,மாணவியர் மற்றும் ஆட்டோ டிரைவர் தினேஷ் ஆகியோர் , 28, காயமடைந்து ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவலறிந்த ஆர்.டி.ஓ.,சிவா தாசில்தார், திருவேங்கடம் ஆகியோர் சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவியர்களை பார்த்து நலம் விசாரித்தனர். விபத்து குறித்து ஆரணி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us