உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 10, 2026 12:19 AM

அ நிறம் | அளவு
கம்பம்: கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடியாகிறது. இதன் சராசரி விலை கிலோ ரூ.2500 ஆக இருந்த நிலையில், பருவமழை தவறியதால் மகசூல் பாதிப்பு ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் போர் துவங்கியுள்ளதால், ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகரித்துள்ளன. இதனால் ஏலக்காய் விலை உயரத் துவங்கியுள்ளது. சராசரி விலை கிலோ ரூ.3000 ஆக உயர்ந்துள்ளது. 'எல்நினோ' காரணமாக மகசூல் குறைந்த சூழலில், ஏற்றுமதி அதிகரிப்பால் விலை மேலும் அதிகரிக்கும் என வர்த்தகர்கள் கூறினர்.
