அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு ரத்து
அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு ரத்து
ADDED : பிப் 16, 2024 05:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கரூரில் கடந்த 2023ல் அதிமுக கண்டன பொதுக்கூட்டம் நடத்தி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் மீதான வழக்கு ரத்து செய்து உத்தரவிட்டது.